2010 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக விவசாயிகள் கூட்டுறவு வங்கியின் முன்பு காலை முதலே காத்திருந்தனர்.
ஆனால் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடுத் தொகை வழங்கப்படாது என அறிவித்த வங்கி நிரவாகம், ஒரு சில விவசாயிகளின் பெயர்களை மட்டும் வெளியிட்டு இவர்களுக்கு மட்டும் பயிர் காப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் நிலம் இல்லாதவர்களுக்கு போலியாக ஒருசிலரின் பெயர்கள் காப்பீட்டுத்தொகை வழங்குவதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினர்.
பின்னர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் தலையிட்டு அனைவருக்கும் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட பின்பு விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.