ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி வந்தடைந்தது.
இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கினார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்று நீரை நம்பியிருந்த விவசாயிகள் முழு மூச்சுடன் விவசாயப் பணியில் ஈடுபட்டனர் என்றே கூறலாம்.
இந்நிலையில் காவிரியில் கிளை ஆறுகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு ஒருசில வாய்க்கால்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படாததால் நாற்றங்கால் விட்டு, நடவுப் பணிகளைத் தொடங்கிய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உடனடியாக பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தங்குதடையின்றி தண்ணீர் கிடைக்க காவிரியில் கூடுதலாக தண்ணீரை தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்