ETV Bharat / state

'வாரிசு' படம்: சபரிமலையில் பேனர் வைத்து வழிபட்ட ரசிகர்கள்! - Sabarimala for the success

நடிகர் விஜயின் 'வாரிசு' படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்து ரசிகர்கள் வழிபாடு செய்தனர்.

'வாரிசு' படம்
'வாரிசு' படம்
author img

By

Published : Dec 19, 2022, 11:04 PM IST

Updated : Dec 20, 2022, 6:22 AM IST

'வாரிசு' படம்: சபரிமலையில் பேனர் வைத்து வழிபாட்ட ரசிகர்கள்!

மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகைக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இரு தரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் பொங்கல் நாளான்று வெளியாக உள்ளது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையைச் சேர்ந்த விஜய் ரசிகர்களான சுபாஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு இளைஞர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று, அங்கே பதினெட்டாம்படி அருகில் ’வாரிசு’ பட பேனரை வைத்து, உயர்த்தி பிடித்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும், வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி சபரிமலையில் ரசிகர்கள் தரிசனம்

Last Updated : Dec 20, 2022, 6:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.