ETV Bharat / state

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

நாகப்பட்டினம்: சீர்காழி தாலுகாவில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை சிறப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் இருவரும் ஆய்வு செய்தனர்.

District collector checking
author img

By

Published : Jun 13, 2020, 4:16 AM IST

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகள், குடிமராமத்து பணிகள் குறித்து குடிமராமத்து சிறப்பு அலுவலர் சந்திரமோகன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் புத்தூர், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த அலுவலர்கள் பணிகளை விரைவில் முடிக்கும்படி உத்தரவிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்;

நாகை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. சுமார் 1073 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெறும் இந்த தூர்வாரும் பணிகள் 204 மண் அள்ளும் இயந்திரங்களை வைத்து இதுவரையில் 740 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 333 கிலோமீட்டர் தொலைவிற்கு கூடுதலாக மண் அள்ளும் இயந்திரங்களை வைத்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்வதற்குள் பணிகள் முடிக்கப்படும். நாகை மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து பணியின் கீழ் 131 பணிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பணிகளின் நிலைகள் குறித்து அவ்வப்பொழுது அலுவலர்களிடம் கேட்டறிந்தும், நேரில் சென்றும் பார்வையிடுகிறோம். இந்தப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்” என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.