ETV Bharat / state

நாகையில் ஆயுதப்படை காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி - நாகையில் ஆயுதப்படை காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி

நாகை: ஆயுதப்படை காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 50 பேருக்கு நேற்று (செப்.21) முதல் தொடர்ந்து 5 நாள்களுக்கு பேரிடர் கால மீட்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Disaster recovery training for armed guards in Nagai

author img

By

Published : Sep 22, 2020, 7:40 AM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, வடகிழக்குப் பருவமழையால் பெரும்பாதிப்புக்கு நாகை மாவட்டம் உள்ளாகும். இதனைக் கருத்தில்கொண்டு மாவட்டத்தில் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக மாவட்ட காவல் துறையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 50 பேருக்கு நேற்று (செப்.21) முதல் தொடர்ந்து 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் உள்ள அதிவிரைவுப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தலைமையில் பயிற்சி பெற்ற 2 காவலர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

பயிற்சியில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துதல், பேரிடர் காலத்தில் ஏற்படும் மின் விபத்து, மரம் விழுந்து ஏற்படும் விபத்து, தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது என்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

நேற்று (செப்.21) பயிற்சியினை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பங்கு பெற்றுள்ள காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.