மயிலாடுதுறை: குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர் ஆளும் கட்சியினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி 60 நாள்கள் ஈட்டா விடுப்பில் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ஆளுங்கட்சியினர் செய்யாத வேலைகளுக்கும் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கின்றனர். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விதிமுறைகள் மீறியுள்ளது.
சூரிய மின் விளக்கு வைப்பதில் முறைகேடு நடந்துள்ளது. ஆளுங்கட்சியினர் அழுத்தம் காரணமாக சரிவர வேலை செய்ய முடியவில்லை. எனது உடல்நிலை, மனநிலையைக் கருத்தில் கொண்டு 60 நாட்கள் ஈட்டா விடுப்பு அளிக்குமாறு கேட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (அக்.28) ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் மற்றும் துணைத் தலைவர் முருகப்பா ஆகியோரிடையே ஏற்பட்ட திமுக கோஷ்டி மோதல் காரணமாகவே அலுவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் சசிகலாவை சேர்க்க மாட்டோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்