ETV Bharat / state

குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் 'காட்மேன்' டீசரை தடை செய்ய கோரிக்கை - காட்மேன் டீசரை தடை செய்ய கோரிக்கை

நாகப்பட்டினம்: ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவுபடுத்தும் வகையில் 'காட்மேன்' என்ற இணையதளம் தொடரின் அறிமுகக் காட்சி உள்ளதாக புகார் Zee 5 ஆன்லைன் சேனல் மீது அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

complaint in nagapattinam against Godman series

author img

By

Published : May 28, 2020, 10:46 PM IST

ஜீ 5 (ZEE 5) என்னும் ஆன்லைன் சேனலில் சமீபத்தில் 'காட்மேன்' Godman என்ற வெப் சீரிஸ் டீசர் வெளியாகி ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சமூகத்தை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் இன்று புகார் மனு அளித்தனர்.

அந்தப் புகார் மனுவில், "தங்கள் சமூகத்தை குறித்தும், வேதத்தை குறித்தும் தவறாக சித்தரித்து இருப்பதாகவும், கொச்சையான வசனங்கள் அந்த சமூகம் குறித்து இடம்பெற்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். எனவே 'காட்மேன்' வெப் சீரிஸின் டீசரை தடை செய்வதுடன் வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மதத்தை இழிவுபடுத்திய அத்தொடரின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ, ஜீ 5 ஆன்லைன் நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க... சர்ச்சையை ஏற்படுத்திய 'காட்மேன்' டீசர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.