ETV Bharat / state

ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கும் பணி ஆய்வு!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியர் லலிதா
ஆட்சியர் லலிதா
author img

By

Published : May 9, 2021, 1:08 PM IST

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் மூச்சுதிணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 175 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், 10 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள், மேலும் 2 நாட்களுக்கு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்குவதற்காக, 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

6 கிலோ லிட்டர் ஆக்சிஜனை, 600 சிலிண்டர்களில் நிரப்ப முடியும். இதனால் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தேவையானதை மட்டும் வாங்குங்க: இன்றும், நாளையும் போனால் மறுநாள் அவ்வளவுதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.