ETV Bharat / state

மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டவர் 4 மாதங்களுக்கு முன்பே மரணம்! - spread the photo of girl student

மயிலாடுதுறை: மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் நான்கு மாதங்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளார்.

மாணவி அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட இளைஞர் 4 மாதங்களுக்கு முன்பே இறப்பு!

author img

By

Published : Oct 22, 2020, 2:53 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழந்தூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, சென்னையில் படிக்கும்போது தோழியின் உறவினரான மெல்வின் செல்வக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு சிறுமி சொந்த ஊரான தேரழந்தூருக்கு வந்துள்ளார். அவரைச் சந்திக்க முடியாத ஏக்கத்தில் இருந்த மெல்வின் செல்வக்குமார் மாணவியிடம் செல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளார்.

இதனையறிந்த பெற்றோர் மாணவியை கண்டித்ததால் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞர் மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவல் துறையினர் சென்னை சேலையூர் பகுதியிலிருந்த மெல்வின் செல்வக்குமாரை தேடி அங்கு விரைந்தனர்.

காவல் துறையினரின் விசாரணையில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி செலவிற்கு பெற்றோர் பணம் கொடுக்காததால், மெல்வின் செல்வக்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இறப்பதற்கு முன்பு மாணவியின் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கலாம் எனத் தெளிவாகியுள்ளது. தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...குடும்பத் தகராறு : மனைவி, 3 பெண் குழந்தைகளை கொலை செய்த கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.