எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத தன்மையை 17 விழுக்காடு என்பதை 22 விழுக்காடாக உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி சாட்டையக்குடி, வெண்மணி உள்ளிட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து நெல் மாதிரிகளை விவசாயிகளிடம் இருந்து மத்திய உணவு மற்றும் தர கட்டுப்பாடு அலுவலர்கள் நேரடியாக சேகரித்தனர்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தர கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் சுப்ரமணியன் தலையில் மத்திய உணவு மற்றும் தர கட்டுப்பாடு அலுவலர்கள் யாதேந்திர ஜெயின், யூனூஸ், ஜெய்சங்கர், பசந்த் உள்ளிட்டோர் அடங்கிய மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மூவாயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு!