நாகப்பட்டினம்: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் 150-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மக்கள் தொழில் தொடங்கி வாழ்க்கை பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு குறைந்த வட்டிக்கு சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு கடன் உதவிகள் வழங்கிவருகிறது.
அதற்கான பயனாளிகள் தேர்வு செய்வதற்காக கடன் வழங்கும் முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடத்தப்பட்டுவருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்பட்ட குத்தாலம். சீர்காழி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை ஆகிய தாலுக்காக்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் கடன் உதவிகேட்டு மனு கொடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகானந்தம் தலைமையில் கடன் வழங்கும் முகாம் நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மகளிர் சுய உதவிக் குழுவினர் தொழில் தொடங்குவதற்காகக் கடன் கேட்டு 150-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் மனுக்களை பெற்று பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். குறைந்தது 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையில் 0.5 விழுக்காடு வட்டியில் கடன்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெரியார் சிலைக்கு மாலையிட்டதால் காவலர்கள் இடமாற்றம் - அதிர்ச்சி