காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மக்களவைத் தொகுதிகளில் மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டம், விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிக்கும் திட்டம், உள்ளிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்தாததால், இந்த தேர்தலில் ஒட்டு மொத்த தொகுதி மக்களின் கவனமும் இந்த பிரச்னை எதிரொலிக்க வேண்டும் என நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மக்களவைத் தொகுதிகளிலும் பல நூறு வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவது என்று முடிவெடுத்து, கடந்த 11ஆம் தேதி முதல்கட்டமாக மயிலாடுதுறையில் 11 வேட்பாளர்களை அறிமுகம் செய்தனர். இதையடுத்துஇரண்டாம் கட்டமாக இன்று செம்பனார்கோவிலில் 50 வேட்பாளர்களை நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.