ETV Bharat / state

5 பேருக்கு கரோனா உறுதி - 20க்கும் மேற்பட்ட தெருக்கள் அடைப்பு - More than 20 streets are clogged with bamboo and iron rod

நாகை: ஐந்து பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதையடுத்து ஆறு வார்டுகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட தெருக்கள் மூங்கில் மற்றும் இரும்பு தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

நாகையில்  6 வார்டுகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

author img

By

Published : Apr 4, 2020, 11:00 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா நோய் தொற்றில் நாகையைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு வார்டுகளைத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக நாகையில் மூன்று வார்டுகளும், நாகூரில் மூன்று வார்டுகள் என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தெருக்களில் பொதுமக்கள் நடமாடுவது மற்றும் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க மூங்கில் மற்றும் இரும்பு தகரம் கொண்டு தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அடைக்கப்பட்டுள்ள தெருக்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

நாகையில் ஆறு வார்டுகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

இதனிடையே பொதுமக்களின் நடமாட்டத்தைத் தடுக்க தெருத்தெருவாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர். தொடர்ந்து, வீட்டில் முடங்கிக் கிடக்கும் பொதுமக்களுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வீட்டிற்கே சென்று வழங்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் பொதுமக்கள் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.