ETV Bharat / sports

"அடுத்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு" - அர்ஜுனா விருது பெற்ற மனிஷா ராமதாஸ்! - MANISHA RAMADOSS

அடுத்த முறை பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என அர்ஜுனா விருது பெற்ற மனிஷா ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அர்ஜுனா விருது பெற்ற மனிஷா ராமதாஸ்
அர்ஜுனா விருது பெற்ற மனிஷா ராமதாஸ் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 11:15 AM IST

Updated : Jan 29, 2025, 12:02 PM IST

சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று (ஜன.28) நடைபெற்றது. வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 416 விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் 416 வீரர்களுக்கும் நடப்பு ஆண்டுக்காக ரூபாய் இரண்டு கோடியே 55 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக விமானக் கட்டணமாக ரூபாய் 30 லட்சம் அளிக்கப்பட்டது. இதுதவிர, சிறப்பாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு, ஐந்து கார்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அர்ஜுனா விருதுகளை பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் துளசி மதி, மனிஷா ராமதாஸ், பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்யா ஸ்ரீ சிவன், இந்திய ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் சால்வை அணிவிக்கப்பட்டும், பரிசுகள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டது.

வேலம்மாள் கல்வி குழுமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மனிஷா ராமதாஸ்
வேலம்மாள் கல்வி குழுமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மனிஷா ராமதாஸ் (Credits - ETV Bharat Tamilnadu)

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸ், "பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கியது மேலும் ஊக்கமளிக்கிறது.

எங்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்துள்ளனர். அத்துடன் அடுத்த முறை பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம். ஒலிம்பிக் போன்ற சர்வதேச போன்ற சாதிப்பவரகளுக்கு அரசு வேலை கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

அர்ஜுனா விருது பெற்ற மனிஷா ராமதாஸ் (Credits - ETV Bharat Tamilnadu)

இதையும் படிங்க: "எதிர்க்கட்சியினரின் சிந்தனையில் குறைபாடு இருப்பதால் அரசை குறை சொல்கின்றனர்"-விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மேலும், "வாழ்வில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், தங்கள் லட்சியத்தை விட்டுக் கொடுக்காமல் சரியான பாதையில் பயணித்தால் கண்டிப்பாக அனைவரும் ஒருநாள் வெற்றி பெறலாம்" எனவும் தெரிவித்தார்.

மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜூனா விருது வென்ற மேட்மிண்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸ், கடந்த 9 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். மனிஷா ராமதாஸ் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 29, 2025, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.