ETV Bharat / state

"பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை"- கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி! - BHARAT SCOUTS AND GUIDES

இந்திய நாடு பன்முகத்தன்மை கொண்ட நாடு. எனவே, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார்
கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 11:20 AM IST

Updated : Jan 29, 2025, 12:05 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28ஆம் தேதி முதல் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி வரை 'பாரத சாரண சாரணியர் இயக்கத்தின்' வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் அங்கமாகத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி மற்றும் சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழாவை நிகழ்ச்சிகளை நேற்று (ஜன.29) கொடி ஏற்றி, தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, மா. சுப்பிரமணியன், எஸ். எஸ். சிவசங்கர், தமிழக சாரண சாரணியர் இயக்க தலைவரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார், கர்நாடக பேரவைத் தலைவர் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய நாடு பன்முகத் தன்மை கொண்ட நாடாகும். எனவே, இங்கு பொது சிவில் சட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அமல்படுத்த முடியாது. இதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. சர்வதேச அளவிலான சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி என்றார்.

இதையும் படிங்க: சென்னை ஆவடியில் தயாரான சுரிநாம் நாட்டின் ராணுவ உடைகள்!

மேலும், இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்துவது சாதாரணமான விஷயம் இல்லை. இந்த துணிச்சலுக்கே தமிழ்நாடு அரசைப் பாராட்ட வேண்டும். சிறுவயதில் நான் சாரணிய உறுப்பினராக இருந்தேன். அதனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் சாரணிய மாணவர்களுக்கு புது உத்வேகம் பிறக்கும் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

Last Updated : Jan 29, 2025, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.