ETV Bharat / state

தள்ளுவண்டி கடைக்காரருடன் மல்லுக்கு நின்ற திமுகவினர்! ஆபாசமாகப் பேசி சண்டையிடும் காட்சி வைரல்! - DMK MEMBERS FIGHT VIDEO

வேலூர் அண்ணா கலையரங்கம் பகுதியில் வீரவணக்க நாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அருகே இருந்த தள்ளுவண்டிக் கடையை அகற்றக் கூறி திமுகவினர் ஆபாசமாகப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி
இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 1:05 PM IST

வேலூர்: வேலூர் அண்ணா கலையரங்கம் பகுதியில் திமுக மாணவர் அணியினர் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் போது சாலையோரம் இருந்த தள்ளு வண்டி கடையை மூடச் சொல்லியும், கடையில் இருந்த விளக்கை அணைக்கச் சொல்லியும் திமுகவினர் ஆபாசமாகப் பேசி சண்டையிடும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஜனவரி 25ஆம் தேதி திமுகவின் மாணவரணி சார்பில் 'வீரவணக்க நாள் சிறப்புக் கூட்டம்’ நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது அண்ணா கலையரங்கம் அருகே சாலையோரம் ஒரு தம்பதி முட்டை சேமியா போடும் தள்ளுவண்டிக் கடை வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த கடைக்கு திமுகவின் சங்கரன் பாளையம் பகுதி செயலாளர் பாலமுரளி கிருஷ்ணன், சலவன் பேட்டை பகுதி செயலாளர் சுந்தர் விஜி மற்றும் திமுகவினர் உணவருந்தச் சென்றுள்ளனர்.

அப்போது திமுகவினருக்கும் கடைக்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கடையை அகற்றுமாறும் திமுக நிர்வாகிகள் கூறியதாகவும், இனி இந்த இடத்தில் கடை நடத்த முடியாது என மிரட்டல் விடுத்ததாகவும் கடைக்காரர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கடையிலிருந்த விளக்கினை அணைக்கச் சொல்லியும், கடையை மூடச் சொல்லியும் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மநீம கட்சியில் இருந்து விலகிய நடிகை வினோதினி.. இது தான் காரணமா?

இந்நிலையில் இந்த சம்பவத்தின் தள்ளுவண்டி கடை வியாபாரின் மனைவி இந்த சம்பவத்தை அலைபேசி கேமராவில் படம் புடித்ததாக தெரிகிறது. மேலும் மிரட்டல் விடுத்த நபர்கள் நேற்றும் கடைக்கு வந்து தகராறு செய்ததால் தள்ளுவண்டி கடைகாரர் மனைவி அந்த வீடியோ காட்சியை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.