மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விவசாயி ஒருவர் தனது 7 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இரவு வீடு திரும்பிய தந்தையிடம் தனக்கு நேர்ந்ததை சிறுமி கூறியுள்ளார்.
உடனடியாக தனது மகளை விவசாயி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். மேலும் இது குறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நான்கு சிறுவர்களைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: மருத்துவமனை வளாகத்தில் பெண்ணிடம் அத்துமீறிய மூவர் கைது!