மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.
ஜனவரி 6ஆம்தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரையிலும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அறிவிக்கப்படுள்ளது.
அதன்படி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜன.16), மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 350க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உதயநிதி நிகழ்ச்சியில் திமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருட்டு: ஒருவர் கைது