ETV Bharat / state

16 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்குச் சீல்: ஆட்சியரை சந்தித்து மனு அளித்த நிறுவன உரிமையாளர்கள் - நாகையில் 16 சுத்திகரிப்பு ஆலைக்கு சீல்

நாகப்பட்டினம்: சீல்வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிறுவன உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

nagapattinam collector
nagapattinam collector
author img

By

Published : Mar 3, 2020, 7:17 AM IST

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நில கோட்ட செயற்பொறியாளர் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குச் சீல்வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், நாகப்பட்டினம், திருமருகல், மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட 16 இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்துவந்த நிறுவனங்களுக்குச் சீல்வைக்கப்பட்டது.

இந்நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டதால், நாகை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி சீல் வைக்கப்பட்ட 16 நிறுவன உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய உரிமையாளர்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியார் நிறுவன ஊழியர்கள், கடன் வாங்கி தண்ணீர் கேன் நிறுவனங்களை நடத்திவருகிறோம். இதனால் விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நாகையில் குறைந்துள்ளதால், மக்களின் குடிநீர் தேவை மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முறைகேடாக செயல்பட்ட குடிநீர் உற்பத்தி நிலையங்களுக்கு சீல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.