கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்ட்டவர்களுக்காக அரசு சிறப்பு வார்டுகளை உருவாக்கி, சிகிச்சை அளித்துவருகின்றது.
இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தேவையான உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக நாடாளுமன்ற நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
முதல்கட்டமாக, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர், முகக்கவசங்கள், சானிடைசர் உள்ளிட்டவை வாங்குவதற்காக 14 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை முதல் தவணையாக ஒதுக்கீடுசெய்துள்ளார்.
முன்னதாக, இதேபோன்று நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தங்களது தொகுதி நிதியிலிருந்து பெருமளவில் தொகையை ஒதுக்கீடுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான உபகரணமில்லை -எம்.பி. செந்தில்குமார் குற்றச்சாட்டு!