ETV Bharat / state

இரண்டு கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஓட்டுநர்! - Pregnant ladies

மதுரை: இரண்டு கர்ப்பிணிகளுக்கு, 108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த ஓட்டுநருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஓட்டுநர்
ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஓட்டுநர்
author img

By

Published : Apr 30, 2020, 10:23 AM IST

மதுரை மாவட்டம் வடிவேல்கரை பகுதியில் வசித்து வரும் ஆனந்திக்கு நேற்று திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரது கணவர் முருகேசன் தனது மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் செந்தில், மருத்துவ உதவியாளர் பழனிவேல் இனைந்து ஆம்புலன்ஸ் உள்ளேயே ஆனந்திக்கு பிரசவம் பார்த்தனர். தற்போது கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஓட்டுநர்
ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஓட்டுநர்

இதேபோல் வெள்ளிமலை பட்டியைச் சேர்ந்த கண்ணனின் மனைவி சுகந்திக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அக்னியும், பழனிவேலுவும் இனைந்து ஆம்புலன்ஸ் உள்ளேயே பிரசவம் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம், பார்த்த இவர்களுக்கு அக்கிராம மக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தை, கர்ப்பிணி மனைவியுடன் உணவிற்குத் தவிக்கும் மாற்றுத்திறனாளி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.