மதுரை: தமிழ்நாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோக்கள் பதற்றத்தை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து இது போலி வீடியோ என்றும்; வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும் காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
போலி வீடியோக்களை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவினர் மணீஷ் காஷ்யப் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் மட்டும் இது தொடர்பாக மதுரை மாவட்டம் உட்பட 13 பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த மணீஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது மதுரை மாவட்ட சைபர் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அதன் காரணமாக, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் துறையினர் பீகார் சென்று மணீஷ் காஷ்யப்பை கைது செய்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். பின், பீகார் யூடியூபருக்கு வரும் ஏப்.03 வரை போலீஸ் காவல் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: ஏஎஸ்பி பல்லை பிடுங்கினாரா? இல்லையா? - நெல்லை விவகாரத்தில் நீடிக்கும் குழப்பம் - முழுவிவரம்!