மதுரை பாராளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் இன்று பாராளுமன்றத்தில், "தமிழ் பண்பாட்டின் தலைநகரான மதுரையை வரலாற்று பாரம்பரியமிக்க நகரமாக அறிவிக்க வேண்டும்" என்றுக் கூறி தனது முதல் உரையை தொடங்கியுள்ளார்.
-
மாமதுரையின் பெருமையை மக்களவையின் கவனத்திற்கு கொண்டு சென்ற எனது நாடாளுமன்ற முதல் உரை...#Madurai #SuVe #MP #CPIM #Loksabha pic.twitter.com/0nbLS4gAun
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாமதுரையின் பெருமையை மக்களவையின் கவனத்திற்கு கொண்டு சென்ற எனது நாடாளுமன்ற முதல் உரை...#Madurai #SuVe #MP #CPIM #Loksabha pic.twitter.com/0nbLS4gAun
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 1, 2019மாமதுரையின் பெருமையை மக்களவையின் கவனத்திற்கு கொண்டு சென்ற எனது நாடாளுமன்ற முதல் உரை...#Madurai #SuVe #MP #CPIM #Loksabha pic.twitter.com/0nbLS4gAun
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 1, 2019
மேலும் அவர் தனது உரையில் கூறுகையில், "மதுரை வெறும் நகரமல்ல... இது தமிழ் பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரிகத்தின் தாயகம். உலகில் 2000 வருடத்திறகு முன்பிருந்து இன்றைக்கும் மதுரை வாழும் நகரமாக இருக்கின்றது. சமீபத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறைகள் கீழடியில் நிகழ்த்திய அகழ்வாய்வு மதுரையின் செழுமையையும் வளமையும் பறைசாற்றுகிறது. இங்கு கண்டுபிடிக்கபட்ட 15,000 தொல்பொருள்கள் ஒரு பெரும் நாகரிகத்திற்கு சாட்சி சொல்கிறது. எனவே,மதுரையை வரலாற்று பாரம்பரியமிக்க நகரமாக அறிவிக்க வேண்டும்", என்று பேசியுள்ளார்.