பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர வன்புணர்வு சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று மாணவர்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்தும் மற்றும் சாலையை மறித்தும் போராட்டங்களை கடந்த இரு நாட்களாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதியை பெற்றுதர வேண்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியும், save women, we want justice என்ற பதாதைகைகளையும் பிடித்து கண்டன கோஷங்களை எழுப்பி போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவி மாணவர்கள் கூறுகையில்,
ஒருசிலர் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த ஆண்களுக்கும் தவறான பெயர்கள் ஏற்படுகிறது.
இதனை வன்மையாக கண்டிக்கும் வகையில் எதிர்பாலினதவர்களுக்கும் பாதுகாப்பாகவும், அரணாகவும் இருப்போம் என்ற வகையிலும் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம்.
எங்களுக்கும் சகோதரிகளும் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும் எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதில் எந்த ஒரு அரசியல் தலையீடும் இருக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.