ETV Bharat / state

கார்த்திகை அமாவாசை: மதுரையிலிருந்து காசிக்கு சுற்றுலா ரயில் - ரயில்வே

கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு, முன்னோர்களை வழிபாடு செய்வதற்காகக் காசிக்குச் சிறப்புச் சுற்றுலா ரயில் ஒன்றை மதுரையில் இருந்து தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Southern Railway  Madurai to Kashi  special tourist train from Madurai to Kashi  new moon of the month of Karthikai  Karthikai  new moon  special tourist train  tourist train from Madurai to Kashi  Madurai  Kashi  madurai news  madurai latest news  கார்த்திகை அமாவாசை  கார்த்திகை  அமாவாசை  மதுரையிலிருந்து காசிக்கு சுற்றுலா ரயில்  மதுரை  காசி  சுற்றுலா ரயில்  சிறப்பு சுற்றுலா ரயில்  தென்னக ரயில்வே  ரயில்வே  பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்
மதுரையிலிருந்து காசிக்கு சுற்றுலா ரயில்
author img

By

Published : Nov 6, 2022, 7:23 AM IST

மதுரை: இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களைத் தரிசிக்க இந்திய ரயில்வே, பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. மதுரையில் இருந்து அடுத்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் நவம்பர் 18 அன்று இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் காசி, கயா, பூரி, ராமேஸ்வரம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இருக்கிறது.

நவம்பர் 18 அன்று புறப்படும் ரயில் திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக முதலில் விஜயவாடா செல்கிறது. பின்பு நவம்பர் 19 அன்று உத்தரப்பிரதேசம், மாணிக்பூர், சித்திரக்கூடம் சென்று நவம்பர் 20 சர்வ ஏகாதசி தினத்தன்று ராம்காட்டில் புனித நீராடி, குப்த கோதாவரி குகை கோயில், காம்தகரி, சதி அனுசுயா கோயில்களில் தரிசனம்.

இதையடுத்து நவம்பர் 21 பிரதோஷ தினத்தன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ராமஜன்ம பூமி கோயில் தரிசித்து நவம்பர் 22 சிவராத்திரி தினத்தன்று காசி கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோயில்களில் தரிசனம்.

நவம்பர் 23 சர்வ அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்கள் வழிபாடு முடிந்து விஷ்ணு பாத தரிசனம். நவம்பர் 24 அன்று ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயம், கொனார்க் சூரியனார் கோயில் தரிசனம். நவம்பர் 26 அன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 21 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம். நவம்பர் 27 அன்று சுற்றுலா ரயில் மதுரை வந்து சேரும்.

பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்துக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலுக்கான பயணச் சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய 7305858585 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.