ETV Bharat / state

மதுரையில் வசூல் பணத்தை வழிப்பறி செய்த திருட்டுக் கும்பல்! - தமிழ் செய்திகள்

மதுரை: வேலைக்குச் சென்றுவிட்டு அதிகாலை வீடு திரும்பியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வசூல் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் பணத்தை வழிப்பறி செய்த திருட்டு கும்பல்

author img

By

Published : May 14, 2020, 10:16 AM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கணபதி நகர் வாசுகி தெருவைச் சேர்ந்தவர் பேச்சிதுரை. இவர் மதுரை கீழமாசி வீதியில் உள்ள எண்ணெய் கடையில் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் வேலைமுடிந்து வசூல் பணம் ரூ.11,400-ஐ எடுத்துக்கொண்டு நேற்று அதிகாலை நான்கு மணியளவில் வாசுகி தெரு வழியாக வீட்டிற்கு வரும்பொழுது தனியார் மருத்துவமனை வாசலில் மூன்று பேர் கொண்ட கும்பல் பேச்சிதுரையை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்த வசூல் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பேச்சிதுரை அவனியாபுரம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். அதன்பின்னர் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆராய்ந்துபார்த்து பின்னர் அந்த வழிப்பறி செய்த கும்பலைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து வில்லாபுரம் பகுதியில் இதுவரை மூன்று இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் இரண்டு வழிப்பறிச் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்.எல்.சி தீ விபத்து: உயிரிழப்பு மூன்றாக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.