தமிழ்நாட்டிலுள்ள 48 சுங்கச் சாவடிகளில் 21 சுங்கச் சாவடிகளில் இன்று (செப். 1) முதல் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, எலியார்பத்தியில் உள்ள சுங்கசாவடியில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 26 சுங்கச் சாவடிகளில் 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே நாட்டில் பொருளாதார மந்தம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு போன்ற பிரச்னைகளில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சுங்கக் கட்டண உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என சரக்கு வாகனங்களின் உரிமையாளர்களும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா