மதுரை: பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் - மதுரை இடையே கூடுதலாக ஒரு வாரம் மூன்று முறை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் இன்று (அக்.10) முதல் இயங்கிக் கொண்டிருக்கிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விரைவு ரயிலுக்கு வழக்கமான கட்டணமான ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு ரூபாய் 70, ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு ரூபாய் 55, பரமக்குடியில் இருந்து மதுரைக்கு ரூபாய் 45, மானாமதுரையில் இருந்து மதுரைக்கு ரூபாய் 30 என வசூலிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் - மதுரை இடையேயான பேருந்து கட்டணம் ரூபாய் 150 என்பது குறிப்பிடத்தக்கது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கடவுளை வழிபடுவது தனிநபர்களின் நம்பிக்கை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை