ETV Bharat / state

"ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு களி தின்பார்" - காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் - தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தவுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு களி தின்பார் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
author img

By

Published : Dec 9, 2020, 7:36 PM IST

மதுரை: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் 75ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருநகர் பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் 75 பெண்களுக்கு அக்கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இலவச புடவைகளை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பின் போது டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர் என்று பாஜகவினர் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "உழைக்கின்ற விவசாயிகளை பார்த்து புரோக்கர்கள் என்று சொல்லுகின்ற பாஜக அரசு அதானிக்கும், அம்பானிக்கும் தான் புரோக்கராக இருக்கிறது.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பு

70 ஆண்டில் எந்த முதலமைச்சரும் வளைந்து கொடுக்காத அடிமைத்தனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் செய்கிறார். மோடிக்கும், அமித்ஷாவிற்கும் செய்யும் பணிவிடையில் எந்த ஒரு பலனும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை.

தற்போது புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மூன்றாயிரம் கோடிகள் கேட்டால் மத்திய அரசிடமிருந்து 75 கோடிகள் தான் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் பிரச்னையில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகம் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு கேட்டிருக்கும் 3,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், அப்படி வழங்கவில்லை என்றால் அதற்காக மத்திய அரசிடம் மாநில அரசு போராடியாவது பெற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல், சொத்துக்குவிப்பு போன்ற புகார் குறித்து விசாரிக்க தனி கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பேன்.

அமைச்சரை சிறைக்கு அனுப்புவதே திமுக மற்றும் மதசார்பற்ற கூட்டணியின் முதல் வேலையாக இருக்கும். அவர் மிக விரைவில் சிறைக்கு சென்று களி தின்பார்" என்றார்.

இதையும் படிங்க: 'திமுக அழுகிப்போன தக்காளி; அந்தக் கட்சிக்கு சகுனம் சரியில்லை' - ராஜேந்திர பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.