ETV Bharat / state

அழகர் கோயில் மலையில் தண்ணீர் தேடி இறங்கும் காட்டெருமைகள் - தாகம் தீர்க்குமா வனத்துறை ?

மதுரை அழகர் கோயில் மலையில் உள்ள காட்டெருமைகள் தண்ணீர் தேடி மக்கள் புழங்கும் பகுதிகளில் தற்போது இறங்க தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

Public fear for Wild water buffalo descending in search of water on Alagar Kovil hill

author img

By

Published : Apr 11, 2022, 2:56 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது அழகர் கோயில். இந்த மலைப்பகுதி சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிகத் திருத்தலமாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலைமீது உள்ள சோலைமலை முருகன் கோயிலிலும், ராக்காயி அம்மன் கோயிலிலும் வழிபாடு நடத்த வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மலைப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் காட்டுப் பகுதியில் உலாவும் காட்டெருமைகள் அழகர் கோயில் மலைப்பாதையில் தண்ணீருக்காக உள்ளே வரத் தொடங்கியுள்ளன. இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை அழகர்கோயில் மலையில் உள்ள காட்டெருமைகள்

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட வன சரகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அழகர் கோயில் மலைப் பகுதியில் மலைப் பாதையை ஒட்டி செல்லும் நீரோடை, கருடர் மற்றும் அனுமார் தீர்த்தத்தில் உள்ள தண்ணீரைப் பருகுவதற்கு மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் காட்டு மாடுகள் வருவது வழக்கம்.
மேலும் இப்பகுதியில் வரும் பொதுமக்கள் பக்தர்கள் குரங்குகளுக்கு உணவுகளை வழங்குகின்றன. அதனை உண்ணுவதற்கும் காட்டெருமைகள் கீழே இறங்கி வருகின்றன.

இதுபோன்ற உணவு வழங்குவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது காட்டுப் பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகச் சோலைமலை முருகன் கோயில் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஊற்று நீரை அருந்துவதற்கு மாடுகள் இறங்கி வருகின்றன.

மலைப் பகுதிக்குள் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்றனர்.

இதையும் படிங்க: 'என்னது.. அழகர் மதுரைக்குள்ள வந்தாரா..?' - அழகரின் ஆயிரமாண்டு வரலாறும் வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு தொகுப்பும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.