மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர் முகாமில், அனுப்பானடி வள்ளலார் நகரை சேர்ந்த பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.
அம்மனுவில் மதுரை அனுப்பானடியில் மக்கும் / மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து, உரம் தயாரிக்கும் மையம் செயல்படுகிறது. ஆனால் இந்த மையத்தில் குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டாமல் அங்கும் இங்குமாக வழி நெடுகிலும் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். மேலும், அக்கம் பக்கத்தில் பள்ளிக்கூடம், கோயில், சுகாதார நிலையம் உள்ளிட்டவை இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் உருவாகின்றன.
எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து, அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கழிவு நீர் குழாய் சுத்தம் செய்ய ரோபோ; குளிரூட்டப்பட்ட கழிவறை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்