ETV Bharat / state

ஆவின் இயக்குநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை மாவட்ட ஆவினில் நிரப்பப்படாமல் உள்ள 11 இயக்குநர் பதவி இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் தீர்ப்பினை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Postponement of judgment in case of election of directors of AAVIN
ஆவின் இயக்குநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
author img

By

Published : Feb 21, 2020, 9:57 PM IST

மதுரையைச் சேர்ந்த பெரியகருப்பன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற பொதுத்துறை நிறுவனம், ஆவின். அதன் மதுரை பிரிவில் நான் உட்பட 17 பேர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டோம். இந்நிலையில், ஒருங்கிணைந்த மதுரை ஆவினிலிருந்து நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு அரசால் தேனி மாவட்ட ஆவின் என தனியாக பிரிக்கப்பட்டது.

Postponement of judgment in case of election of directors of AAVIN
ஆவின் இயக்குநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை ஆவினுக்கு தேர்தல் நடத்தாமல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் தலைவராக நியமிக்கப்பட்டார். மதுரை ஆவினுக்கு உட்பட்ட 11 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராக அவர் இல்லை. வாக்காளர் பட்டியலிலும் அவரது பெயர் இல்லை. இருப்பினும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அவரது நியமனத்தை நீக்கம் செய்து, தேர்தல் நடத்தி நிர்வாகக் குழுவை தேர்வு செய்யவும், அதுவரை ஆவின் நிர்வாகத்தை பொதுமேலாளர் கவனிப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 14 மாவட்ட ஆவின் நிர்வாகக் குழு தேர்தல் தொடர்பாக கூட்டுறவு தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை ஆவினில் ஏற்கனவே நான் உட்பட 11 இயக்குநர்கள் உள்ளோம். எங்கள் பதவி காலம் 2023ஆம் ஆண்டில்தான் முடிகிறது. இதனால் மதுரை ஆவினில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளுக்குதான் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 11 இயக்குநர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடத்துவது சட்டவிரோதம். எனவே, கடந்த தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட இயக்குநர்கள் பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தும், ஆவின் நிர்வாகக் குழு தேர்தல் தொடர்பாக மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தும், மதுரை ஆவினில் நிரப்பப்படாமல் உள்ள இயக்குநர் பதவியிடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தவும் உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்,‘ஆவின் நிர்வாகத்திற்கு முறையாக தேர்தல் நடத்தி அனைத்து இயக்குநர்களையும் தேர்வு செய்ய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பாணை வெளியிட்ட பிறகு அதில் நீதிமன்றம் தலையிட வழியில்லை’ என்றார்.

இதனையடுத்து நீதிமன்றம் இவ்வழக்கின் தீர்ப்பினை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க : ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.