ETV Bharat / state

ஆரம்பம் முதல் ஆய்வுக் கல்வி வரை அனைத்தையும் இலவசமாக்குக - சிபிஐ மாநாட்டில் தீர்மானம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு

மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதோடு, ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை முற்றிலும் இலவசமாக பயிலும் கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Political Uprising Conference of the Communist Party of India held in Madurai

author img

By

Published : Feb 19, 2021, 2:45 PM IST

மதுரை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மதுரை வண்டியூர் அருகே சென்னை-கன்னியாகுமரி சாலையில் உள்ள திடலில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், "வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து சட்டப்பேரவை தேர்தலில் வென்று விடலாம் என அதிமுக நினைக்கிறது. பொய்யான விளம்பரம் மூலமாக தங்களைப் பலப்படுத்திக் கொள்ள அதிமுக நினைக்கிறது. வகுப்புவாத சக்திகள் தலை தூக்க கூடாது. அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் கட்சிகள் ஆட்சியில் இருக்க கூடாது" என்றார்.

இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மகேந்திரன் பேசுகையில், "தமிழ்நாட்டை ஆளும் அதிமுக சமூகநீதி கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைக்க நினைக்கிறது" என்றார். அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசுகையில், "இந்தியாவை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற இந்த முழக்கம் வெல்ல வேண்டும்" என்றார்.

Political Uprising Conference of the Communist Party of India held in Madurai
சிபிஐ மாநாட்டில் கூட்டணித் தலைவர்கள்

தா.பாண்டியன் பேசும்போது, "அதிமுகவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலோடு வழி அனுப்ப வேண்டியது மிக மிக அவசியம். நாடாளுமன்றத்தில் எந்தவித தீர்மானமும் இயற்றாமல் ரிசர்வ் வங்கியில் இருந்து நிதியை சுரண்டியவர்களின் ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது. ஆகையால் இருவரையும் சேர்த்து துரத்தியடிக்க வேண்டும்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா பேசுகையில், "மதவெறி அரசியல் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவின் மதச் சார்பின்மையை ஒழிக்க நினைக்கிறது. அதன் கருவியாக பாஜக செயல்படுகிறது. இந்திய நாட்டின் அனைத்து வளங்களையும் உற்பத்திகளையும் தனியார் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதையே தனது பணியாகக் கொண்டு செயல்படுகிறார் இந்திய பிரதமர் மோடி. இதன் தொடர்ச்சியாகவே பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்படுகிறது.

விவசாயிகள் போராடுவது குறித்து மோடி அரசு சிறிதும் கவலைப்படவில்லை. பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் இந்திய உணவு இறையாண்மைக்கு எதிரானது. தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு மத்திய பாஜகவின் எடுபிடி அரசாக விளங்குகிறது. தொடர்ந்து மத்திய பாஜக சமூக நீதிக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை பல்வேறு வடிவங்களில் நடத்தி வருகிறது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக அதிமுக நாடாளுமன்றத்தில் ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை என்றார்.

சிபிஐ மாநாட்டில் ஸ்டாலின்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், வேலையில்லாத் திண்டாட்டம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து தமிழ்நாட்டிற்கு வருகின்ற மோடி என்றைக்காவது பேசியிருக்கிறாரா? தமிழ்நாட்டைை ஆளும் அதிமுக அரசு தொடர்ந்து ஏமாற்று வேலைகளையே செய்து வருகிறது' என்றார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகையில், முதுகெலும்பற்ற அரசாக தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு திகழ்கிறது. பல்வேறு தலைவர்களால் பண்படுத்தப்பட்ட பூமி இது. பாஜக அரசு கொண்டு வரக்கூடிய அனைத்து திட்டங்களும் இந்துக்களுக்கும் எதிரானதே என்பதை எல்லோரும் உணரவேண்டும். தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் தேசத்தை கூறுபோட்டு விற்பவர்களுக்கும் தேசத்தை காக்க நிற்கின்ற காவலர்களுக்கும் இடையிலான போர் என்றார்.

மாநாட்டின் துவக்கமாக, டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் இறந்து போன 200 விவசாயிகளின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தமிழ் நாட்டினை தனித்துவத்தோடு மீட்டெடுக்கவும், வளமார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கவும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவு தரவேண்டும்.

விவசாயிகள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் நபர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும். பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து அவை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

சிபிஐ மாநாட்டில் பேசிய தலைவர்கள்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை நிபந்தனையின்றி மத்திய மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதோடு ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை முற்றிலும் இலவசமாக பயிலும் கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். இந்திய சிறைகளில் விசாரணை கைதிகளாக உள்ள அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்வுக்கு மாநாடு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் இவை அனைத்தின் விலைகளையும் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 11 தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.