மதுரை: திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள 16ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நாளை(அக்.9) ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தநிலையில் இன்று (அக்.8) மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தேர்தல் அலுவலர் அபிதா ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு பெட்டிகள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருமங்கலம் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலுக்கு 54 ஆயிரம் வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பதிவு பெட்டிகள் திருமங்கலம் தொகுதியில் உள்ள 97 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை ஆட்சியர் அனீஷ் சேகர் சோதனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் அனீஷ் சேகர், " மதுரை திருமங்கலத்தில் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் டிஎஸ்பி முத்துகுமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 97 வாக்குச்சாவடிகளில் 11 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஒரு வாக்குச்சாவடி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது " என்றார்.
இதையும் படிங்க: ரெப்போ வட்டியில் மாற்றமில்லை.. யாருக்கு லாபம்... உச்சத்தில் பங்குச் சந்தை!