ETV Bharat / state

5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழி இறைச்சி விற்பனை! - 5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழி இறைச்சி விற்பனை

மதுரை: உசிலம்பட்டியில் தனியார் கோழி இறைச்சிக் கடை திறப்பு விழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டது.

One kilogram of chicken sold for 5 paisa in Madurai

author img

By

Published : Nov 29, 2020, 10:34 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் பிராய்லர் கோழி இறைச்சிக் கடை நிறுவனம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் புதிய கிளையை இன்று திறந்தது.

இந்த கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு திறப்பு விழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழி கறி வழங்கப்படும் என போஸ்டர் அடித்து உசிலம்பட்டி முழுவதுமாக ஒட்டப்பட்ட நிலையில், இன்று திறப்பு விழாவின் போது நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் கோழிக்கறி வாங்க குவிந்தனர்.

இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று போக்குவரத்தையும், பொதுமக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்தினர்.

5 பைசாவிற்கு ஒரு கிலோ கோழி இறைச்சி விற்பனை!

ஒரு சிலரிடம் மட்டுமே ஐந்து பைசா நாணயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் குவிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக பக்தர்கள் இல்லாமல் ஏற்றப்பட்ட மகா தீபம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.