ETV Bharat / state

நீட் தேர்வு எழுதிய மாணவி திடீரென மயங்கி விழுந்து பலி! - no need neet

மதுரை: நீட் தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த சந்தியா என்னும் மாற்றுத்திறனாளி மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மாணவியின் தந்தை
author img

By

Published : May 6, 2019, 6:27 AM IST

Updated : May 6, 2019, 11:05 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரின் மகள் சந்தியா (17). மாற்றுத்திறனாளியான இவர், எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவராக வேண்டும் என்று தந்தையிடம் கூறியுள்ளார். மகளின் கனவு நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்துள்ளார் முனியசாமி. மருத்துவர் கனவை நிறைவேற்ற கடுமையாக படித்து தேர்வுக்கு தயாராகியுள்ளார் சந்தியா.

இந்நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வு பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்று நடந்தது. சந்தியாவிற்கு மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இவரும் ஆதார் அட்டை, ஹால் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, பெற்றோரிடம் ஆசி வாங்கிவிட்டு சிரித்த முகத்துடன் தேர்வு எழுத வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். மகளும் நன்றாக தேர்வு எழுதி மருத்துவராகி குடும்பத்தை காப்பாற்றுவாள் என்று ஆசையோடு அனுப்பிவைத்த பெற்றோருக்கு, ஒரு பேரதிர்ச்சியான செய்தி மட்டுமே வந்துள்ளது.

தேர்வு முடித்துவிட்டு பேருந்தில் ராமநாதபுரம் திரும்பி வந்து கொண்டிந்தபோது சந்தியா திடீரென மயங்கி விழுந்துள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் சந்தியாவை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்ததும், பதறி அடித்து மருத்துவமனை வந்தார் முனியசாமி. நீட் தேர்வை எழுதுவதற்காக சென்ற மகள் சடலமாக படுத்து கிடப்பதை பார்த்து முனியசாமி கதறி அழுதது, அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது.

நீட் தேர்வு எழுதி திரும்பிய மாணவி மயங்கி விழுந்து பலி

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் வரையில் சென்று போராடிய உயிர் நீத்த அனிதா தொடங்கி, தற்போது சந்தியா வரையில் எண்ணற்ற வருங்கால மருத்துவர்களை இழந்து வருகிறோம். உயிர்களை காப்பாற்றுவதற்கு படிக்கும் மருத்துவ படிப்பின் நுழைவுத் தேர்வு, பல மாணவ, மாணவிகளை காவு வாங்கி வருவது வேதனையின் உச்சமாக உள்ளது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
05.05.2019

*மதுரையில் நீட் தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பும் போது மயங்கி விழுந்து மாற்றுத்திறனாளி மாணவி பரிதாபமாக பலி*

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா 17 வயது மாற்றுத்திறனாளி மகள்,

இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார்,

தேர்வு முடித்து விட்டு பேருந்தில்  ராமநாதபுரம் சென்று கொண்டிருக்கும்போது திருப்புவனம் அருகே சென்றபோது மாணவி மயங்கி விழுந்துள்ளார்,

உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் 108 மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த தெரிவித்தார்,

நீட் தேர்வு எழுத வந்த இடத்தில் மாற்றத்தினால் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Visual send in ftp
Visual name : TN_MDU_07_05_NEET WROTE A STUDENT DEATH_TN10003

Last Updated : May 6, 2019, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.