ETV Bharat / state

"சீமைக் கருவேல மரங்களை அகற்ற என்ஜிஓக்களை பயன்படுத்தலாமே" - நீதிமன்றம் கேள்வி!

author img

By

Published : Jan 13, 2023, 4:54 PM IST

தென்காசி மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், பொதுப்பணி துறைச் செயலாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

NGOs
NGOs

மதுரை: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், "தென்காசி மாவட்டம், ஆலங்குளம் கிராமத்தில் தொட்டியன்குளம் கண்மாய் அமைந்துள்ளது. சுமார் 88 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயின் நீரை நம்பியே சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் கண்மாயை சரியாக தூர்வாராத காரணத்தினால் அங்கு சீமைக் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன.

இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல் கழிவுநீரும் கண்மாயில் கலக்கப்படுகிறது. எனவே, ஆலங்குளம் கிராமத்திலுள்ள தொட்டியங்குளம் கண்மாயை முறையாக தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்காசி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக டெண்டர் விட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், தன்னார்வல தொண்டு நிறுவனங்களை வைத்து சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாமே என்று தெரிவித்தனர்.

தென்காசி, ஆலங்குளம், தொட்டியங்குளம் கண்மாய் மட்டுமல்லாமல், தென்காசி மாவட்டம் முழுவதும் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணி துறைச்செயலாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:மதுரையில் இனி விமான சேவை 24 மணி நேரமும் இயங்கும்: எப்போதிருந்து தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.