ஹைதராபாத்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் புதிய சாதனைகளை தொடும் உயரத்தில் தொழில்நுட்பங்களை வளர்த்தி வருகிறது. அந்த வகையில் இரு செயற்கைக்கோள்களை இணைத்து பல வேலைகளை எளிமையாக்கும் 'SpaDex' திட்டத்தை அறிமுகம் செய்து, அதில் முக்கியமான பகுதியை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த திட்டத்தில், இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' முறையை வெற்றிகரமாக இஸ்ரோ செய்து முடித்துள்ளது. டாக்கிங் சக்சஸ் என்று தொடங்கும் பதிவை தங்கள் பிரத்யேக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் இஸ்ரோ, "இது ஒரு வரலாற்று நிகழ்வு. டாக்கிங் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. முதலில் 20 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவந்த செயற்கைக்கோள்களை, ஐந்து கி.மீ தூரத்தில் கொண்டுவந்து சோதனை செய்யப்பட்டது. பின்னர் இரு செயற்கைக்கோள்களும் ஒன்றோடு ஒன்று வெற்றிகரமாக இணைக்கப்பட்டது," என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த வெற்றியை அடுத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக செயற்கைக்கோள் இணைப்பில் நான்காம் இடத்தை இந்தியா தக்கவைத்துள்ளது. வானியல் ஆய்வு மட்டுமல்ல, புவி சுற்றுவட்ட பாதையில் இந்தியாவின் விண்வெளி நிலையம் அமைக்கும் கனவு திட்டத்தை மெய்ப்பிக்கவும் இந்த வெற்றி புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.
SpaDex திட்டத்தில் டாக்கிங் என்றால் என்ன?
இந்திய விண்வெளி ஆய்வின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் SpaDex திட்டம், உலகளவில் வெகுசில நாடுகள் மட்டுமே சோதனை செய்து வெற்றிகண்ட முறையாகும். டிசம்பர் 30, 2024 அன்று சுமார் 220 கிலோ எடை கொண்ட SDX01 மற்றும் SDX02 என இரு செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி சி60 (PSLV-C60) ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் SDX01 துரத்தி (Chaser) செல்லும் செயற்கைக்கோளாகவும், மற்றொன்றான SDX02 இலக்காகவும் செயல்படும்.
அவை 10 முதல் 20 கிலோமீட்டர் (கி.மீ) இடைவெளியுடன் மணிக்கு சுமார் 28,000 கி.மீ வேகத்துடன் புவிவட்டப் பாதையைச் சுற்றிவந்தது. இன்னும் சற்று எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இந்த செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவரும். இந்த நேரத்தில் இரு செயற்கைக்கோள்களையும் இணைப்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. ஆனால், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் மட்டும் இதில் வெற்றி கண்டது.
வெடித்து சிதறும் அபாயம்
இந்த திட்டத்தில் வெற்றி கண்டால், பெரும் பொருளாதார ஆதரவுகள் கிடைக்கும், விண்வெளி ஆய்வில் செலவினங்கள் குறையும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. எனவே, இதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள்களை ஒன்றோடு ஒன்றை இணைக்க (டாக்கிங் முறை) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
SpaDeX Docking Update:
— ISRO (@isro) January 16, 2025
🌟Docking Success
Spacecraft docking successfully completed! A historic moment.
Let’s walk through the SpaDeX docking process:
Manoeuvre from 15m to 3m hold point completed. Docking initiated with precision, leading to successful spacecraft capture.…
ஆனால், இரண்டு செயற்கைக்கோள்களும் அருகருகே வேகமாக வரும்போது, நூல் அளவு வித்தியாசம் இருந்தாலும், அவை ஒன்றோடு ஒன்று மோதி வெடித்து சிதறும் அபாயம் இருந்தது. எனவே, இஸ்ரோ 20 கி.மீ தொலைவில் இருந்த செயற்கைக்கோள்களை ஒன்றோடு ஒன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்படி கட்டளையிட்டு, ஐந்து கி.மீ அருகருகே கொண்டுவரப்பட்டது.
பிரதமர் பாராட்டு
அதனைத் தொடர்ந்து ஜனவரி 7, 2025 அன்று இரண்டு செயற்கைக்கோள்களையும் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தொழில்நுட்ப கோளாறினால் அதில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் தான் தாங்கள் வெற்றிகரமாக இரு செயற்கைக்கோள்களையும் இணைத்துவிட்டோம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதையும் படிங்க |
இதை பாராட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, "இஸ்ரோ ஆய்வாளர்களுக்கு என் பாராட்டுகள். விண்வெளி திட்டத்தில் இந்தியாவின் அடுத்த நிலையை இந்த வெற்றி எடுத்துக் காட்டுகிறது," என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Congratulations to our scientists at @isro and the entire space fraternity for the successful demonstration of space docking of satellites. It is a significant stepping stone for India’s ambitious space missions in the years to come.
— Narendra Modi (@narendramodi) January 16, 2025
பாரதிய விண்வெளி நிலையம்
இது தொடர்பான காணொளி ஒன்றையும் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக அமெரிக்கா, சீனாவைப் போன்று இந்தியாவில் விண்வெளியில் நிலையம் அமைக்க வேண்டும் என்றால் இந்த திட்டம் முழுமையாக வெற்றிபெற வேண்டும். ஏனென்றால், விண்வெளி நிலையத்தை ஒரே நேரத்தில் புவியில் செலுத்த இயலாது. இதுபோன்ற டாக்கிங் முறைப்படி தான் ஒவ்வொரு பாகங்களை விண்ணில் செலுத்தி ஒரு முழு விண்வெளி நிலையத்தை உருவாக்க முடியும்.
As we eagerly await the docking, watch this short video to learn more about the groundbreaking SpaDeX mission. Stay tuned for updates!
— ISRO (@isro) January 1, 2025
🚀✨ #SpaDeX #ISRO pic.twitter.com/MAEMar37Q7
2035-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சொந்தமாக "பாரதிய விண்வெளி நிலையம்" என்று அழைக்கப்படும் விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு 26 அக்டோபர் 2024 அன்றே அறிக்கை வெளியிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. விண்வெளி நிலையம் அல்லாமல், பிற செயற்கைக்கோள்களுக்கு தேவையான உதவிகளைக் கொண்டு சேர்க்கவும் இந்த செயற்கைக்கோள்கள் இணைப்பு முறை; அதாவது டாக்கிங் முறை உதவும். இதனால், செலவுகளை குறைத்து பல மடங்கு நம்மால் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.