ETV Bharat / state

நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன்

author img

By

Published : Aug 25, 2022, 10:20 AM IST

மதுரை: சமூக வலைதளங்கள் மூலமாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில், நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பாலியல் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தங்கபாண்டியனை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி தங்கபாண்டியன், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது “தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடப்படுகிறது. ஆனால், சாட்சியங்களை மிரட்டக் கூடாது. சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது.

விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம்” என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நாகர்கோவில் நீதிமன்றத்தில் காசி ஆஜர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.