மதுரை பழங்காநத்தம் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணியை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆளும் அரசை தொடர்ந்து குறை கூறுவதுதான் எதிர்க்கட்சிகள். அதனால் எதிர்க்கட்சிகள் என்றாலே குறை கூறுவதுதான். அது அவர்களின் வேலை. எங்கள் மீது எந்தக் குறை இருந்தாலும் நாங்கள் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம்" என்றார்.
திரைப்படத்துறையினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தவறுதான். இங்கு யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயவே செய்யும். அதிமுக அரசு இதில் நிச்சயம் தலையிடாது.
பலர் இந்த அரசின் மீது விமர்சனங்களை வைக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் தவறு இல்லாத ஒரு புதிய அரசை கொண்டு செல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும்.
மதுரையில் இன்று காலை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்ற விபத்து, எதிர்பாராத ஒன்றாகும். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: விஜய் மீதான வருமான வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது - கே.எஸ். அழகிரி