ETV Bharat / state

அதிமுக அரசின் முறைகேடுகளை வெளிக்கொண்டுவருவோம்- அமைச்சர் சக்கரபாணி - madurai collector office

கடந்த அதிமுக ஆட்சியின்போது உணவு பொருள் வழங்கல் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்தையும் விரைவில் வெளிக்கொண்டு வருவோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Minister sakkarapani
அமைச்சர் சக்கரபாணி
author img

By

Published : Jul 16, 2021, 11:33 AM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை சார்பாக மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் சக்கரபாணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "திமுக தேர்தல் அறிக்கையில் சுட்டிக் காட்டியது போல் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி 14 வகையான இலவச பொருள்களையும் திமுக அரசு வழங்கியுள்ளது.

minis
அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

வாடகை கட்டடத்தில் இயங்கும் நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கைகள் அலுவலர்கள் மூலம் வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து 2 ஆண்டுகளில் நியாய விலைக்கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. புதிதாக குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு 15 நாள்களில் புதிய குடும்ப அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நேரடி நெல் கொள்முதல் மையத்தில் எந்தத் தவறும் நடைபெறாமல் இருக்க வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து அவர்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அமைச்சர் சக்கரபாணி பேட்டி

இந்தாண்டு அரசு 44 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 37 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் உணவு பொருள் வழங்கல் துறையில் நடைபெற்ற முறைகேடுகளை விரைவில் வெளிக்கொண்டு வருவோம். வெளிப்படையான டெண்டர் மூலம் 84 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் அரிசி ஆலைகளில் ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: திமுகவின் தலையீடு அதிகமாக இருக்கிறது: ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.