ETV Bharat / state

அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு இல்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் வருவாய்த் துறை அமைச்சருமான ஆர் பி உதயகுமார்

மதுரை: சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருள் விலை உயர்வு இல்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
author img

By

Published : Apr 22, 2020, 1:37 PM IST

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குள்பட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்து கிலோ காய்கறிகளை தனது சொந்த செலவில் இலவசமாக திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினரும் வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வழங்கிவருகிறார்.

அதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் உள்ள ரவுண்டானா பகுதியில் தினந்தோறும் 10 ஆயிரம் நபர்களுக்கு வீடு வீடாகச் சென்று இலவசமாக வழங்கப்பட உள்ள காய்கறி தொகுப்புகள் அடங்கிய வாகனத்தை தொடங்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விநியோகம்செய்யப்படும் பல சரக்கு, மளிகைப் பொருள்களின் மொத்த கடை பஜாரான கீழ மாரட் வீதி, தயிர் மார்க்கெட் பகுதியினை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் சாமானிய மக்கள் உணவின்றி தவிக்கவிடாமல் இருப்பதற்காக அம்மா உணவகத்தின் மூலம் குறைந்த விலையில் தரமான கூடுதல் காய்கறிகள் கொண்ட உணவுகள் நாள்தோறும் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

காய்கறி தொகுப்புகள் அடங்கிய வாகனத்தை துவக்கிவைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழ்நாடு அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும் திட்டங்களை குறைசொல்வது எதிர்க்கட்சித் தலைவரின் வாடிக்கை. இதில் எந்த அரசியலும் இல்லை, யார் வேண்டுமென்றாலும் விலை நிர்ணயத்தை ஏற்றுக்கொண்டு இலவசமாக வழங்கலாம்.

இன்றைக்கு மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட வெளியே வரமுடியதாக சூழல் உள்ளது. இதனால், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அவர்களது இல்லங்களுக்கே சென்று அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன" என்று கூறினார்.

மேலும், சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாநிலம் முழுவதும் விலை உயர்வு இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றும், சுங்கக் கட்டணம் மத்திய அரசு சார்ந்தது என்பதால் அது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் பார்க்க: மத்திய குழுவுக்கு மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.