மதுரை: மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், பொது மக்களுக்கு கரோனா இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை மகபூப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளிவீதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
அம்முகாம்களை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போடுவது மட்டும்தான் ஒரே தீர்வு. அதனைப் பொதுமக்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தொடர்ந்து மாநில அரசு பல வகைகளில் முயன்று தடுப்பூசி கொள்முதலை அதிகரித்து வருகின்றது. அதன் காரணமாக தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். பொதுமக்கள் ஆர்வத்தோடு தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தடுப்பூசி விழிப்புணர்வு ஆட்டோவை உருவாக்கிய சென்னை மாநகராட்சி!