ETV Bharat / state

மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை?  என அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: மேலவளவு கொலை வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

melavalavu-case
author img

By

Published : Nov 20, 2019, 1:09 PM IST

மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 13 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கில் உள்துறை அலுவலர்களை ஆவணங்களை தாக்கல் செய்யக்கோரியது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதையொட்டி, இன்று நடைபெற்ற விசாரணையில் சிறைத்துறை டி.ஐ.ஜி, எஸ்.பி. மற்றும் அதிகாரிகள் ஆஜராகி இருந்தனர்.

இதற்கிடையே, கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சிறைத்துறை அலுவலர்கள் ஆஜராகி 13 பேர் விடுவிக்கப்பட்ட அரசாணையைத் தாக்கல் செய்தனர். இந்த அரசாணையை எதிர்த்து தாமாகவே முன்வந்து நீதிபதிகள் வைத்திய நாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு வழக்காக எடுத்து விசாரித்தது.

அப்போது, இந்த கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், 13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணை, எதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:

தமிழ்நாடு ஹோமியோபதி பதிவாளர் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை

Intro:Body:

மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை? - உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

***

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 13 பேர் முன்கூட்டியே விடுதலையான வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்து, உள்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராக கூறிய வழக்கு விசாரணை இன்று வந்தது.

சிறைத்துறை டி.ஐ.ஜி,  எஸ்.பி.மற்றும் அதிகாரிகள் ஆஜராகி இருந்தனர். கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ள நிலையில் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகி 13 பேர் விடுவிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தனர். இந்த அரசாணையை எதிர்த்து தாமாகவே முன்வந்து நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு வழக்காக எடுத்து விசாரித்தனர்.

இந்த வழக்கில் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்,இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.

13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணை எதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் -ஆனந்த வெங்கடேஷ் அமர்வு விசாரணையை நவம்பர் 25 க்கு ஒத்திவைப்பு.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.