மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர், மார்ச் எட்டாம் தேதி குடும்பச்செலவுக்காக பழங்காலத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால், அந்தப் பணத்திற்கு அதிக வட்டிக் கேட்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.
இதுமட்டுமின்றி வட்டி பணம் தராததால் சக்திவேலை வீட்டுக்குள் பூட்டிவிட்டு பிரபு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த சக்திவேல் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியில் திரிந்தால் பாஸ்போர்ட் முடக்கம் - விஜய பாஸ்கர்