மதுரை: மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரையில் உள்ள மிகவும் பிரபலமான பழமையான யுசி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் உள்ள சில கட்டடங்கள் பழமையாகவும், உறுதியற்றதாகவும் உள்ளன. எனவே இங்குள்ள மாணவர்களை வெளியேற்றி, ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளியின் கட்டடம் கட்டட பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, உறுதி தன்மையுடன் நன்றாக உள்ளது என சான்று அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் தேவையற்ற சந்தேகங்களை கிளப்ப வேண்டாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒடுக்கீடு சட்டத்தை அமல்படுத்த உத்தரவு..!