ETV Bharat / state

'ரோம் நகரைப் போலவே மதுரையை உருவாக்கும் அலுவலர்கள்' - அமைச்சர் செல்லூர் ராஜு - ரோம் நகரை போலவே மதுரையை உருவாக்கும் அலுவலர்கள்

மதுரை: ரோம் நகரைப் போலவே மதுரையை நமது மாநகராட்சி அலுவலர்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர் என்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

madurai smart city
madurai smart city
author img

By

Published : Feb 2, 2020, 11:48 AM IST

'மாசில்லா மதுரை' திட்டத்தின் கீழ் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், 'ஒரு நகரத்தை திடீரென உருவாக்க முடியாது. ரோம் நகரை உருவாக்கியது போல, நமது மதுரையை நல்ல மதுரையாக... மாமதுரையாக அலுவலர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்தி வைத்துள்ளனர். தொன்மையான நகரங்களின் பழமை மாறாமல் பாதுகாக்கப்படும்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதிக்குள், வைகையில் கழிவுநீர் எங்கும் கலக்காதவாறு, ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி பணிகளால், மதுரை விரைவில் சிட்னி நகரைப் போல மாறப்போகிறது.

அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

வாட்ஸ்அப்பில் எது எதற்கோ வாக்களிக்கும் மக்கள் மதுரை மாநகராட்சிப் பணிகளை பாராட்டி வாக்களிக்க வேண்டும். பிப்ரவரி ஒன்று முதல் 21ஆம் தேதி வரை, மதுரையை சிறந்த நகரமாகத் தேர்வு செய்ய, மதுரை மக்கள் வாட்ஸ்அப்பில் வாக்களிக்க வேண்டும். மேலும், மதுரையின் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர கட்டப்பட்டு வரும் பாலங்களின் கட்டுமான பணியும், மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டமும் கூடிய விரைவில் நிறைவு பெறும்' என்றார்.

இதையும் படிங்க: ‘வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எதுவும் பட்ஜெட்டில் இல்லை’ - கனிமொழி

Intro:ரோம் நகரை போல் மதுரையை அதிகாரிகளும் உருவாக்கி வருகின்றனர் - அமைச்சர் செல்லூர் ராஜு அடுத்த அதிரடி

ரோம் நகரை போலவே மதுரையை நமது மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு.Body:ரோம் நகரை போல் மதுரையை அதிகாரிகளும் உருவாக்கி வருகின்றனர் - அமைச்சர் செல்லூர் ராஜு அடுத்த அதிரடி

ரோம் நகரை போலவே மதுரையை நமது மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு.

மாசில்லா மதுரை திட்டத்தின் கீழ் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஒரு நகரத்தை திடீரென உருவாக்க முடியாது. ரோம் நகரை உருவாக்கியது போல நமது மதுரையை நல்ல மதுரையாக மாமதுரையாக அதிகாரிகள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

முதல்வரும், துணைமுதல்வரும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்த வைத்துள்ளனர். தொன்மையான நகரங்களின் பழமை மாறாமல் பாதுகாக்கப்படும்.

2020 டிசம்பர் 30க்குள் வைகையில் கழிவுநீர் எங்கும் கலக்காத படியும், ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மதுரை விரைவில் சிட்னி நகரை போல மாற போகிறது. இதைச்சொன்னதற்கு தான் வாட்சப்பில் மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள். எங்கள் ஆசையை தான் சொன்னோம். மதுரைக்காரனின் ஆசையை கூட சொல்ல விட மாட்டேங்கிறார்கள். உண்மையில் மதுரை புதுமையான நகரமாக மாற உள்ளது.

வாட்சாப்பில் எது எதற்கோ வாக்களிக்கும் மக்கள் மதுரை மாநகராட்சி பணிகளை பாராட்டி வாக்களிக்க வேண்டும். பிப்ரவரி 1 முதல் 21ம் தேதி வரை மதுரை சிறந்த மதுரையாக தேர்வு செய்ய மதுரை மக்கள் வாட்சப்பில் வாக்களிக்க வேண்டும்.

மதுரை திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். விரிவான நகரம் அல்ல. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் சிலவற்றை பொறுத்து தான் ஆக வேண்டும் என பேசினார்.

மேலும் அவர் மதுரையின் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர கட்டப்பட்டு வரும் பாலங்களின் கட்டுமான பணியும், மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டமும் கூடிய விரைவில் நிறைவு பெறும் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.