ETV Bharat / state

ரயில் பயணிகளின் குறைகள் என்ன? - ஜூன் 15ல் மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு கூட்டம்! - மதுரை ரயில்வே

மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழுவின் 157வது கூட்டம் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குதல், கூடுதல் நடைமேடைகள் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைக்க குழு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Madurai
மதுரை
author img

By

Published : May 26, 2023, 7:36 PM IST

மதுரை: மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழுவில் வர்த்தக சபை, தொழில்கள் சார்ந்தோர், விவசாயம் சார்ந்தோர், பதிவு செய்யப்பட்ட ரயில் பயணிகள் சங்கங்களின் உறுப்பினர்கள், நுகர்வோர் அமைப்பு, மாற்றுத்திறனாளிகள் அமைப்பை சார்ந்தோர், ரயில்வே வாரியத்தின் சிறப்பு நியமனத்தால் நியமனம் செய்யப்பட்டவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த 2022-2023ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகக் கூட்டம் கடந்த ஜூலை 28ஆம் தேதி இணைய வழியில் நடத்தப்பட்டது. இரண்டாவது ஆலோசனைக் குழு கூட்டம், கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி நேரடியாக நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் நடந்து 5 மாதங்கள் கடந்த நிலையில், மதுரை ரயில்வே கோட்டம் இந்த ஆண்டிற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழுவின் 157வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டிற்கான முதல் ஆலோசனைக் குழு கூட்டம் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: "க்யூ ஆர் கோடு மூலம் நொடியில் டிக்கெட்" - ரயில் பயணிகள் வரவேற்பு!

இது குறித்து மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜூன் 15ஆம் தேதி மாலை 3 மணிக்கு, மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கல்யாண மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றும், இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவற்றை மே 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை ரயில் நிலையத்தில் 'கருவாடு' விற்பனைக்கு கடை - தெற்கு ரயில்வே ஏற்பாடு

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், "கொரோனாவிற்கு முன்பு நீக்கப்பட்ட ரயில் நிறுத்தங்களை திரும்ப வழங்குதல், முன்பு சாதாரண பயணிகள் கட்டண ரயில்களாக இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் அவ்வாறே இயக்குதல், பாண்டியன், நெல்லை, முத்து நகர், பொதிகை, செந்தூர் ரயில்களுக்கு நிழல் ரயில்கள் இயக்குதல், கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குதல், முன்பதிவு மையங்களில் உள்ள முறைகேடுகளை களைதல், வாகன காப்பகங்களில் உள்ள இடர்பாடுகளை நீக்குதல், நடைமேடைகளில் பெட்டிகளின் வருகையை கண்டறியும் வசதியை ஏற்படுத்துதல், மதுரை கோட்டத்தில் நிறைவு பெறாமல் உள்ள மேம்பால பணிகளை நிறைவேற்றுதல், நடைமேடைகளை நீட்டித்தல், கூடுதல் நடைமேடைகள் அமைத்தல், சுரங்க பாதைகளில் நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: "மதுரை ரயில் நிலையம் அடுத்த 3 ஆண்டுகளில் உலகத்தரத்தில் மறுசீரமைக்கப்படும்" - தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.