தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி அரசு விதிமுறையை மீறி பள்ளி மாணவ, மாணவிகளை வரவழைத்து வகுப்பு எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் அமர்ந்து இருப்பது பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, பள்ளி நிர்வாகம் மாணவ மாணவிகளை பள்ளிக்கு படிப்பதற்காக வரவழைக்கவில்லை என்றும் மாணவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் கொடுப்பதற்காகவே வரவழைக்கபட்டதாகவும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முன்பகை காரணமாக நண்பர் மீது தாக்குதல்; சிசிடிவி காட்சி வெளியீடு