ETV Bharat / state

கடும் விலை வீழ்ச்சியைச் சந்தித்த மதுரை மல்லிகை: உழவர்கள் வேதனை

author img

By

Published : Jun 9, 2021, 1:53 AM IST

மதுரை: மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.120-க்கு விற்பனையாகி கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக உழவர்களும், விற்பனையாளர்களும் அடைந்துள்ளனர்.

கடும் விலை வீழ்ச்சியைச் சந்தித்த மதுரை மல்லிகை

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர் சந்தையில் மதுரை மல்லிகை உள்பட பல்வேறு மலர்கள் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம்.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருப்புவனம், காரியாபட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுரை மல்லிகை உற்பத்திசெய்யப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 30 டன்னுக்கும் மேலாக மதுரை மலர் சந்தைக்கு மல்லிகை விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதிசெய்யப்படுகிறது.

தற்போதைய கரோனா கால ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு நேற்றுமுதல் (ஜூன் 8) மலர் சந்தை திறக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 2 டன் மல்லிகை பூக்களே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

அவற்றையும் மக்கள் வாங்குவதற்கு ஆர்வம்காட்டாத நிலையில் நேற்று காலை ரூ.150-க்கு தொடங்கிய விற்பனை, நேரம் செல்ல செல்ல ரூ.120 ஆக சரிந்து கடும் விலை வீழ்ச்சியைச் சந்தித்தது.

மதுரை மல்லிகை மட்டுமன்றி செவ்வந்தி, கேந்தி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட மலர்களும் கிலோ ரூபாய் பத்துக்கு விற்பனைசெய்யப்பட்டது. விலை குறைவு, போக்குவரத்து இன்மை போன்ற காரணங்களால் மல்லிகைப் பூவைப் பறிப்பதில் உழவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் செடியிலேயே பூ கருகும் அவலம் தொடர் நிகழ்வாக உள்ளது.

மதுரை மலர் சந்தையில் உள்ள சில்லறை பூக்கள் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில்,

"தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக சுப நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்துக் கோயில்களின் நடையும் சாத்தப்பட்டிருப்பதால் பூவின் விற்பனை நடைபெறவில்லை.

நேற்று முன்தினம் கடை திறக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் பூ வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால்தான் மதுரை மல்லிகையின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது" என்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மல்லிகை சீசன் என்பதால் கிலோ ரூபாய் 2,500 வரை விற்பனையான நிலையில் தற்போது ரூபாய் 120 என சரிந்தது உழவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.